18 மாதங்களுள் கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும்

ரூபாய் 929 மில்லியன்கள் முனைய அபிவிருத்தி மற்றும் சரக்குகளை கையாளல் பொருட்டு முதலீடுச் செய்யப்படும்.

கொழும்பு துறைமுகத்தை இலங்கையின் ஸ்மார்ட் வர்த்தக துறைமுகமாக மாற்றியமைக்கும் பொருட்டு நவீன தொழில்நுட்ப முறைகள் துறைமுக செயற்பாடுகளிற்கு அறிமுகப்படுத்தப்படுவதாக துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று அறிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ர்ட் துறைமுகமாக மாற்றியமைப்பது காலத்தின் தேவையாகும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியால் இத்திட்டத்தின்  பொருட்டு ரூபாய் 929 மில்லியன்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதன் மூலமாக  ஒன்றினைந்து கூட்டாக செயற்படும் திறன் அதிகரிக்கும். குறித்த நிலமைக்கேற்ப செயற்படுதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திச் செய்வதன் மூலமாக இதுவோர் ஸ்மார்ட் துறைமுகமென அனைவராலும் போற்றப்படும்.

தொழில்நுட்ப அபிவிருத்தி எனும் அடிப்படை திட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக இந்நீண்டகால அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னோக்கி கொண்டுச் செல்ல இயலும்.

இத்தி;;ட்டத்கின் கீழ் முனையங்களின் தொழில்நுட்ப வசதிகளை அபிவிருத்திச் செய்வதன் ஊடாக முனைய முகாமைத்துவம் மற்றும் சரக்கு கையாளல் உரிய முறையில் நடாத்தப்படும். இவ்வனைத்துச் செயற்பாடுகளும் 12-18 மாதங்களுள் நிறைவடையுமென அமைச்சர் தெரிவித்தார்.

முனைய தொழில்நுட்ப அபிவிருத்தியின் கீழ் Gate Automation, Yard Automation, Quay Side Automation, Prime Route DGPS, Business Intelligence Tools, web portals and simulation tools ஆகியன அபிவிருத்திச் செய்யப்படும்.

லேமன்ஸ் கொள்கைக்கமைவாக உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலப்பகுதியில் கொழும்பு துறைமுக முனையம் அதிகளவு கொள்கலன்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வினைத்திறனான முனையமாக செயற்படுமென அமைச்சர் ரத்னாயக்க விளக்கமளித்தார்.

எம்முடைய எண்ணங்களிற்கமைவாகவே “ஸ்மார்ட்டாக” செயற்படுதல் என்பதை விளங்கிக்கொள்ளலாம். உரிய தகுந்த எண்ணக்கருக்களிற்கமைவாக இத்திட்டத்தை கொழும்பு துறைமுகத்தில் செயற்படுத்த வேண்டும். இது வெறுமனே தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாகும். துறைமுகத்தை சுத்மாக பேணுதல், ஊழியர்களின் வினைத்திறனான செயற்பாடுகள், முகாமைத்துவம் மற்றும் நலன்புரி சேவைகளும் மேற்குறிப்பிட்டதனைப் போன்று மேம்படுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறன திட்டங்களை முன்னெடுப்பதையிட்டு நான் இலங்கை துறைமுக அதிகார சபையின் (SLPA) தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பிரசன்ன லொகுகே அவர்களிற்கு என்னுடைய நன்றிகளை தெரிவிக்கின்றேனென அமைச்சர் தெரிவித்தார். 

Leave a Reply

*

one × 1 =