கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ள பயணிகள் கப்பல்களுக்கு சேவை வழங்கும் புதிய வர்த்தகத்தில் இலங்கை

கொழும்பு துறைமுகத்துக்கு  வெளியே நங்கூரமிட்டுள்ளகடற்கரை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இருந்து பார்க்கக்கூடிய இரண்டு பயணிகள் கப்பல்களுக்கு நங்கூரமிடுதல், கழிவகற்றல் மற்றும் பணியாளர் பரிமாற்றம் ஆகிய சேவைகளை இலங்கை வழங்குவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. க்ரவுன் ப்ரின்ஸஸ் மற்றும் ஐலன்ட் ப்ரின்ஸஸ் ஆகியவையே இவ்விரு கப்பல்களும் ஆகும்.

இவ்விரு கப்பல்களும் கழிவகற்றல், எரிபொருள் மற்றும் பணியாளர் பரிமாற்றம் சேவைகளுக்காக வந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரபை தெரிவித்துள்ளது. கழிவகற்றல் நடவடிக்கைகள் உள்நாட்டு முகவர்களால்  மேற்கொள்ளப்படும் அதேவேளை கொழும்பு துறைமுகம் வழங்குகின்ற அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் அறவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

க்ரவுன் ப்ரின்ஸஸ் கப்பல் இறக்கிய பணியாளர்கள் 479 பேரில் 380  இந்தியர்களும் 99 இந்தோனேஷியர்களும் உள்ளடங்குவர். ஐலன்ட் ப்ரின்ஸஸ் கப்பலானது 277  இந்தியர்களை இறக்கியுள்ளது.இந்தியர்கள் விமானத்தில் தாய்நாடு செல்ல இந்தோனேஷியர்கள் ஐலன்ட் ப்ரின்ஸஸ் கப்பலில் இணைந்து கொண்டனர்.

இலங்கை துறைமுக அதிகாரபை அதிகாரிகள் கருத்து  வெளியிடுகையில் இருக்கின்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குவதாகவும் பணியாளர் பரிமாற்றம் இலங்கையரின் நேரடித்தலையீடு இன்றி இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவலை அடுத்து கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகள் கப்பல் வருகையை இலங்கை இடைநிறுத்தியது. எவ்வாறாயினும் மனிதாபிமான அடிப்படையில் விநியோகம், எரிபொருள் மற்றும் பணியாளர் பரிமாற்றம் போன்றவற்றுக்காக இலங்கை பயணிகள் கப்பல்களை கொழும்பில் தரிப்பதற்கு அனுமதித்தது. பணியாளர் பரிமாற்ற சேவைகளை இலங்கை கடந்த மாதம் ஆரம்பித்தது. அனேகமான விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக கப்பல் பணியாளர் பரிமாற்ற நவடிக்கைகளுக்கு விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அத்துடன் தீவின் துறைமுகங்களும் ஒன்றாக இணைந்து உதவி புரிகின்றன.

பணியாளர் பரிமாற்ற சேவையானது கொவிட் தொற்றின் காரணமாக உருவான புதிய வர்த்தக வாய்ப்பாகும் என்று விமான சேவைகள் அதிகாரபை தெரிவித்துள்ளது.

நாம் வழங்குகின்ற சேவைகளுக்கு கட்டணம்  செலுத்தப்படுகின்றன.ஆனால் பொருளாதார நலனையும் விட இலங்கை துறைமுகங்களுக்கான சாதகமான தாக்கம் மற்றும் அதன் நற்பெயர் என்பன சிறப்பிக்கப்படும்.

துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் கருத்து  வெளியிடுகையில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் வழங்கப்பட்ட இச்சேவைகளானது இலங்கையின் சுற்றுலாத்துறை மூலோபாய விருத்தி நடவடிக்கைகளுக்கு பேருதவியாக அமையும் என்று தெரிவித்தனர்.

கொவிட் – 19 தொற்று  இலங்கையில் ஏற்படுவதற்கு முன்னர் ஏராளமான கப்பல்கள் கொழும்பு வருவதற்கு பட்டியலிடப்பட்டிருந்தன. மார்ச் மாத்த்தில் மாத்திரம் 29 கப்பல்கள் வருவதற்குஇருந்தன.

இச்சேவைகளை வழங்குவதன் ஊடாக நாம் நீண்டகால வர்த்தகத்திற்கான செயற்பாடுளை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.

Leave a Reply

*

19 − 16 =