மேலதிக கப்பல் பணியாளர்களை தாய்நாடுஅனுப்புவதற்கு Crown Princess பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை!

பிரபல்யம்மிக்க பயணிகள் கப்பலான க்ரவுன் ப்ரின்ஸஸ் (Crown Princess)அண்மையில் அதன் பணியாளர் குழுவொன்றை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கொவிட் – 19 தொற்றுத்தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி க்ரவுன் ப்ரின்ஸஸ் கப்பலில் உள்ள மேலதிக 381 பணியாளர்களை கொழும்புத்துறைமுகத்தில் இறக்கி அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் கொழும்பு துறைமுகத்துக்குஇக்கப்பல் வந்துள்ளது.

அப்பணியாளர்கள் தமது  தாய்நாட்டுக்கு செல்வதற்கான தேவையான  அனுமதி கிடைக்கும் வரை  இக்கப்பலானது தற்சமயம் வெளித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. வெளியேறும் பணியாளர்கள் இலங்கை சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை துறைமுக அதிகாரசபை நடைமுறைப்படுத்துகின்ற முறையான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்றி கொழும்புத்துறைமுகத்தில் அவர்களை இறக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அங்கிருந்து பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விஷேட விமானம் மூலம் இப்பணியாளர்கள் இந்தியாவுக்குஅனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

க்ரவுன் ப்ரின்ஸஸின் உள்நாட்டு முகவரான மோல்ஷிப் (சிலோன்) நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. நிமல் ரஞ்சிகொட கருத்து கூறுகையில் வெளியேற இருக்கின்ற இப்பணியாளர்கள், எதிர்பார்க்கப்பட்டதை போன்று 29.05.2020 அன்று இந்தியாவுக்கு அனுப்பிவைக்க முடியாமல் உள்ளது.எவ்வாறாயினும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் திட்டமிட்டபடி பாதுகாப்பாக அவர்களை அனுப்புவதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

க்ரவுன் ப்ரின்ஸஸ்(Crown Princess)கப்பலானது2006ஆம் ஆணடில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பயணிகள் கப்பலாகும். பெர்முடா(Bermuda) கொடியின் கீழ் இக்கப்பல் பயணிக்கின்றது. இக்கப்பலானது 113,561 தொன் மொத்த கொள்ளளவையும் 8.8 மீற்றர் ஆழத்தையும் 288.63 மீற்றர் நீளத்தையும் 36.05 மீற்றர் அகலத்தையும் உடையது என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரின்ஸஸ் க்ரூஸஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இக்கப்பலானது அந்நிறுவனத்தினாலேயே இயக்கப்படுகிறது.

உலகளாவிய கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக 2098 பணியாளர்களையுடைய க்ரவுன் ப்ரின்ஸஸ்(Crown Princess)கப்பலின் சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பணியாளர்களை இவ்வாறு பாதுகாப்பான முறையில் அவர்களது தாய்நாடுகளுக்கு அனுப்பி வைக்க ப்ரின்ஸஸ்முகாமைத்துவமானது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

*

13 + four =