துறைமுகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடித்து பிராந்தியத்தில் துணிவுடன் தொடர்ந்து பயணிக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை

எ சி எம் கே ரஹ்மான்

உலகெங்கும் பரவி இயல்பு நிலையை முடக்கி உயிர்களையும் காவுகொண்டு மனங்களில் அச்சத்தை விதைத்து கண்களுக்கு தெரியாமல் நடமாடிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19. இன்று வல்லரசுகளையும் வலுவிழக்கச்செய்து எங்கும் மனித வாழ்கையையே புரட்டிப்போட்டிருக்கிறது இந்த கொரோனா. உலக நாடுகள் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

அதேநேரம் சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவிய நாள் தொடக்கம் இலங்கையும் உன்னிப்பாக அவதானித்து வந்தது. மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  அவர்களின் வழிகாட்டலில் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை உட்பட ஏனைய பிரிவுகளோடு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கேற்ப கடந்த பெப்ரவரி மாதம் நாட்டுக்குள் ஏற்படப்போகும் இக்கொவிட் 19 தொற்றுத்தொடர்பாக சுகாதார தரப்பினரால் அரச மற்றும் தனியார் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொவிட் 19 தொடர்பாக அரசாங்கமும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வேளையில் இலங்கை துறைமுக அதிகாரசபையானது ஏற்படப்போகும் நிலைமையை கருத்திற்கொண்டு கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி மஹபொல பயிற்சி நிலையத்தில் சகல பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்களுக்கும் கொவிட்-19 சம்பந்தமாக விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டது. இதேவேளை கடந்த மார்ச் மாதம் 11 திகதி இலங்கையின் முதலாவது கொவிட்-19 தொற்றுடையவர் கண்டுபிடிக்கப்பட்டார். இந்நிலையில் அரசாங்கமானது கொவிட்-19 பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி சில நிறுவனங்களையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்தது. அதில் இலங்கை துறைமுக அதிகாரசபையும் உள்ளடங்கியது.

இப்பின்புலத்தில் தேசிய தேவையை கருத்திற்கொண்டு  இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதனோடு இணைந்த சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் உள்ளிட்ட அரசின் வழிகாட்டலிலும் துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சா் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அவர்களின் ஆலோசனையில் துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை சுங்கத்திணைக்களம், இலங்கை பொலிஸ் திணைக்களம், இலங்கை கடற்படையினர் உட்பட கொழுமபு துறைமுக SAGT, CICT முனையங்களுடனும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன.

மேலும் அரச மற்றும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கும் முப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கும் ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு குறிப்பாக கொழும்பு துறைமுகத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு துறைமுக சேவைகளை தொடர்ச்சியாக இது நாள் வரைக்கும் கொண்டு செல்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களின் தலைமைத்துவத்தினாலேயே சாத்தியமானது.

கடந்த 2020 மார்ச் மாதம் 13 திகதி இடம்பெற்ற முகாமைத்துவ குழுக்கூட்டத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் இவ்வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்குரிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இதற்கிணங்க அலுவலகங்கள் மற்றும் வேலைத்தளங்களின் ஊழியார்களுக்கு அவசியமான தொற்று நீக்கி உபகரணங்கள் மற்றும் தொற்று நீக்கி திரவங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் சகல ஊழியா்களுக்கும் முகக்கவசம், கையுறை என்பனவும் வழங்கப்பட்டன. அதேபோல் அரசின் தீர்மானத்திற்கு அமைய வெளிநாட்டு பயணங்களும் கைவிடப்பட்டன.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் உபதலைவா் தலைமையில் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் அவர்களின் ஒருங்கிணைப்பில் கொவிட்-19 ஒழிப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் ஊடாக அரச மற்றும் சுகாதாரப்பிரிவினர் மூலமாக வழங்கப்படுகினற ஆலேசனைகள் மற்றும் உத்தரவுகள் நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களின் எண்ணக்கருவில் செயலக பகுதியில் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை மத்திய நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை மத்திய நிலையத்தினால் துறைமுக வளாகத்தில் கொவிட்-19 தொடர்பாக சகல தகவல்களையும் ஒன்று திரட்டுதல், அறிக்கையிடல் மற்றும் தேவைக்கேற்ப உயர் முகாமைத்துவத்திற்கு அறிவித்தல் அத்துடன் கப்பல்கள் சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகளை ஒருங்கிணைப்புச்செய்தல், நிறுவனத்தின் தேவைப்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்புச்செய்தல், துறைமுக கட்டணம் மற்றும் சேவை வழங்கல் தொடர்பாக வருகின்ற பிரச்சினைகள் குறித்து ஒருங்கிணைப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் பாதுகாப்பு பகுதியினால் கிருமித்தொற்று நீக்கல் விஷேட பிரிவொன்றையும்  உருவாக்க முடிந்தது. இப்பிரிவானது கடற்படையின் கொவிட்-19 ஒழிப்பு பிரிவுடன் இணைந்து துறைமுக வளாகத்தினுள் கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்குரிய கிருமித்தொற்று நீக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் வைத்திய பகுதியினால்  கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கு அரச சுகாதார சிபா்சுகளுக்கமைய ஊழியா்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் இத்தொற்றின் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பரவலினை கவனத்திற்கொண்டு துறைமுகத்தில் இயக்க மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியா்கள் தொடா்பாக தற்காலிக புதிய சேவைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் துறைமுத்தின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கடமைக்கு சமுகமளிக்கின்ற சகல ஊழியா்களும் மற்றும் துறைமுத்திற்குள் வருகின்ற ஏனையவர்களும் துறைமுக நுழைவாயிலில் பாதுகாப்பு அதிகாரிகளால் உடல் வெப்பநிலை பாரிசோதிக்கப்பட்டே தற்சமயம் துறைமுக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனா். அத்துடன் தொடா்ச்சியாக 5 நாட்கள் கடமைக்கு சமுகமளிக்காத ஊழியா்கள் வைத்திய பகுதிக்கு அனுப்பப்பட்டு வைத்தியாரின் கடமைக்கான சிபார்சினைப் பெறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கடமைக்கு சமுகமளிக்கின்ற சகல ஊழியா்களும் உரிய பகுதித்தலைவரின் அனுமதியுடன் கடமைக்கு சமுகமளிப்பது கட்டாயமானதாகும். அதேபோன்று அரச சுற்றுநிருபங்களுக்கமைவாக வீட்டிலிருந்து கடமை புரிவதும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊரடங்கு காலப்பகுதியில் கடமைக்கு சமுகமளிக்கின்ற ஊழியா்களின் நலன்புரி நடவடிக்கைகளை உயா்ந்த மட்டத்தில் பேணுவதற்காக துறைமுக அதிகாரசபையினால் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்ப பிரதான மார்க்கங்களில் ஊழியா்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன. மேலும் தொடா்ச்சியாக உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கும் எரிபொருள் சலுகை வழங்குவதற்கும் சலுகை அடிப்படையில் நுகா்வோர் பொறிமுறை அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் மற்றும் நீண்டகால அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்கின்ற ஊழியா்களுக்கு வைத்திய பகுதியினால் அவ்வசதிகளை தொடா்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கும் தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டன.

ஊழியா்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பத்து மாதம் மற்றும் பல்தேவை கடன்கள் தொடா்பாக மாதாந்த தவணைத்தொகை மற்றும் வட்டி என்பன ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சம்பளத்தில் அறவிடாதிருப்பதற்கு முகாமைத்துவத்தினால் தீா்மானிக்கப்பட்டது. இந்நிலைமையை கவனத்திற்கொண்டு நிறுவனத்தினுள் இயங்கும் கூட்டுறவு நிதி நிறுவனமும் அவா்களின் கடன் தவணை அறவீடுகளை ஏப்ரல் மாதத்தில் தமது அங்கத்தவா்களிடம் இருந்து அறவிடாதிருப்பதற்கு தீா்மானித்தது.

தீடீரென ஏற்பட்ட இக்கொரோனா தொற்று நிலைமை மற்றும் முன்னறிவித்தல்  இன்றி நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொணடு கப்பல் மற்றும் கடல்சார் வா்த்தக பகுதியினருக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சின் தலையீட்டினால் முடியுமானதாக இருந்தது. அதற்கிணங்க கப்பல்களின் தாமதக்கட்டணத்தை விலக்களிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் துறைமுக மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தொடா்ச்சியாக மேற்கொள்வதற்கு தேவையான ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்குரிய  தேவையான வசதிகள் அந்தந்த நிறுவனங்களுக்கு செய்துகொடுக்கப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபையினால் வழங்கப்பட்ட நபா் மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் ( வருடாந்த மற்றும் மாதாந்த ) அனுமதிக்காலம் முடிவடைந்தமை தொடா்பாகவும் உரிய நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விடயத்துக்குப்பொறுப்பான அமைச்சா் கௌரவ ஜோன்ஸ்டன் பொ்ணாண்டோ அவா்களின் ஆலோசனையின் பேரில் 2020 மார்ச் 16 ஆம் திகதி முதல் 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி வரை முனைய மற்றும் குதம் கட்டணங்களில் இருந்து (Occupational Charges) முழுமையாக விலக்களிக்கப்பட்டது.

இறக்குமதி மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளின் வேண்டுகோளை கவனத்திற்கொண்ட விடயத்துக்குப்பொறுப்பான கௌரவ அமைச்சா் அவா்களின் உத்தரவுக்கமைவாக 2020 ஏப்ரல் 14 ஆம் திகதியிலிந்து 2020 மே 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய அடிப்படை தொழில்சார் கட்டணம் (Basic Occupational Charges) மாத்திரம் அறவிடுவதற்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கான இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு கொள்கலன்களுக்குரிய தண்டனைக்கட்டணம் (Penal Charges) முழுமையாக விலக்களிக்கப்படுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனூடாக துறைமுக நடவக்கைகளை தொடாந்தும் மேற்கொள்ள முடிந்ததோடு துறைமுகத்தில் இயங்குகின்ற தனியார் முனையங்களான SAGT மற்றும் CICT முனையங்களுடன் இணைந்து சா்வதேச கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  இலங்கை துறைமுக அதிகாரசபையினால் முடிந்தது.

கோவிட்-19  நிலைமைக்கு முகம் கொடுக்க முடியாமல் இப்பிராந்தியத்தின் அனேகமான துறைமுகங்கள் மூடப்பட்டிருக்கின்ற நிலையில் கொழும்பு துறைமுகம் உட்பட இலங்கையின் சகல துறைமுகங்களும் தமது நடவடிக்கைகளை தொடா்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல முடியுமாக இருப்பது ஒரு விஷேட நிலைமை ஆகும். இதனால் கொழும்பு துறைமுகம் சர்வதேச அளவில் நற்பெயரை பெற்றுக்கொண்டதுடன் பிராந்தியத்தில் தமது நம்பிக்கைத்தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மேலும் துறைமுக ஊழியா்கள் மற்றும் சேவைகளை பெற வருவோர் துறைமுகத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய கோவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி நூல் ஒன்றும் தயாரிக்கப்பட்டு அவ்வழிகாட்டி நடைமுறைகள் அதிகாரிகளால் கடுமையாக அமுல்படுத்தப்பட்டும் வருகின்றன.

முக்கியமான விடயம் என்வென்றால் துறைமுகத்கில் இதுவரையில் எந்தவொரு கொவிட்-19 தொற்றாளரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதாகும். இந்நிலையில் கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு துறைமுக நடவடிக்கைகள் தடையின்றி தொடா்ச்சியாக முன்னெடுத்து செல்லப்படுகின்றமையானது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சா் கௌரவ ஜோன்ஸ்டன் பொ்ணாண்டோ அவா்களின் ஆலேசனைகள் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவா் ஜெனரல் தயா ரத்னாயக்க அவா்களின் சிறந்த வழிகாட்டலில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவத்தின் துரித செயற்படுத்தல்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியே!

A.C.M.K. Rahman is an Assist. Manager, Admin Secretariat at Sri Lanka Ports Authority. He is the officer in charge of Joint Operations Centre on fight against Covid-19

Leave a Reply

*

one × four =