இலங்கையிலிருந்து நிர்க்கதிக்குள்ளான 700 இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்திய கடற்படைகப்பல்

நிர்க்கதிக்குள்ளான இந்தியர்கள் 700பேருடன் இந்தியாவின் கடற்படைக்கப்பலானINS Jalashwaகப்பல்“வந்தே பாரத்” நடவடிக்கையின் “சமுத்ரசேது” இரண்டாம் கட்டத்தில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று செல்லவுள்ளதாகNDTVசேவை அறிவித்துள்ளது.

இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலானது தமிழ் நாடு தூத்துக்குடியைநோக்கி பயணிக்கவுள்ளது. இந்திய கடற்படையின் தகவலுக்கமைய மாலைதீவிலிருந்தும் 700 பேருடன் தமிழ் நாடு தூத்துக்குடியை நோக்கி இக்கப்பல் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய சுகாதாரகோட்பாடுகள் மற்றும் சமுக இடைவெளி பேணுதலை நோக்காகக்கொண்டு இக்கப்பலானது குறிப்பாக சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் பச்சை என  3 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

INS Jalashwaகப்பலின் கட்டளை அதிகாரியான GAURAV DURGAPAL அவர்கள் குறிப்பிடுகையில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் கடற்படை தலைமையகத்தினாலேயே பிரகடனப்படுத்தப்படுவதோடு கட்டளையும் பிறப்பக்கப்படுகின்றது. முழுக்கப்பலும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக 3 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளியேறுபவர்கள் சகலரும் தங்கும் பகுதி சிவப்பு வலயமாகவும் செம்மஞ்சள் பகுதி வெளியேறுபவர்கள் தொடர்பான கவனிப்பை மேற்கொள்கின்ற அர்ப்பணிப்புடனான குழுவினர் இருக்கின்ற வலயமாகவும் கப்பலோட்டிகள் மற்றும் கப்பல் அதிகாரிகள் இருக்கின்ற பகுதி பச்சை வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருக்கின்ற இந்தியத்தூதுவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.இது INS Jalashwaகடற்படைக்கப்பலின் 3வது பயணமாகும் என்று தெரிவித்துள்ள அவர் ஏற்கெனவே நிர்க்கதிக்குள்ளான இந்தியர்கள் 1400 பேரை இக்கப்பலானது மாலைதீவிலிருந்து இருதடவைகள் இந்தியாவுக்கு அழைத்துசென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கப்பலில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Share:

Leave a Reply

*

one × three =