தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் புதிய தாதியா் விடுதி திறந்துவைப்பு

தொழில்நுட்ப உதவியுடன் திட்டத்தினை முன்னெடுத்தது இலங்கை துறைமுக அதிகாரசபையே

அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் கடமை புரிந்து கொண்டு கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தாதியர்களின் விடுதி வசதிகளை விருத்தி செய்யும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய விடுதிக்கட்டிடம் சுகாதார மற்றும் சுதேசிய மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி அவர்களினால் இன்று அதாவது மே மாதம் 08 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

கொவிட்-19 உலகளாவிய தொற்றானது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் அதற்கு முகம்கொடுப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று கட்டுபடுத்தல் செயலணியின் கூட்டத்தில் அங்கொடை தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் தாதியர் விடுதி வசதிகளின் அவசியம் பற்றி தெரிவித்த வேளையில் அது தொடர்பாக தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அச்செயலணியின் உறுப்பினர் முன்னாள் இராணுவத்தளபதி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க பூரண இணக்கம் தெரிவித்தார்.

அவரின் தலையீட்டுடன் அமெரிக்காவில் உள்ள கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவா்களின் ஈஸ்ட் கோஸ்ட் அமைப்பின் செயலாளர் சேனக்க செனவிரத்ன அவா்களின் ஒருங்கிணைப்புடன் அச்சங்கத்தின் தலைவா் Dr. சுகுமார் நாகேந்திரன் அவா்களின்  15 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் இத்தாதியா் விடுதியை சகல வசதிகளுடனும் நிர்மாணிக்க முடிந்தது.

திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் சுதேசிய மருத்துவ சேவைகள் அமைச்சா் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தேசிய தொற்று நோயியல் நிறுவனம் நாட்டின் தேசிய சொத்து என்று குறிப்பிட்டதுடன் சீனாவில் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பம் முதலே மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டர் என்றும் தொரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவா் ஜெனரல் தயா ரத்னாயக்க ஜனாதிபதி அவா்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று கட்டுபடுத்தல் செயலணி தொடா்பாக விளக்கியதோடு இத்திட்டத்தை குறுகிய காலப்பகுதிக்குள் முழுமைப்படுத்துவதற்கு பங்களிப்புச்செய்த இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், இலங்கை விமானப்படை அதிகாரிகள் உட்பட மற்றும் ஏனையோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொணடார்.

3300 சதுர அடியைக்கொண்ட 16 அறைகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இவ்விடுதியில் 32 போ் தங்குவதற்குரிய வசதிகள் காணப்படுகின்றன. இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது இலங்கை துறைமுக அதிகாரசபையே.

Leave a Reply

*

two × 1 =