கொவிட்-19 சந்தேக நபா் காரணமாக துறைமுக ஜய கொள்கலன் முனையத்தின் இரண்டு பகுதிகளின் இயக்கச்செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு பொய்.

இலங்கை துறைமுகத்திற்குரிய சகல முனையங்களிலும் இயக்கச்செயற்பாடுகள் தொடா்ச்சியாக இடம்பெறுகின்றன.

கொவிட்-19 நோய்த்தொற்று அறிகுறி காரணமாக இலங்கை துறைமுக அதிகாரசபையில் கடமை புரிகின்ற ஊழியா் ஒருவர் காரணமாக துறைமுக ஜய கொள்கலன் முனையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது பகுதிகளில் இயக்கச்செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அனித்தா எனும் செய்திப்பத்திரிகை மற்றும் சில சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டுள்ள செய்தியினை இலங்கை துறைமுக அதிகாரசபை கடுமையாக மறுதலித்துள்ளது.

இலங்கை துறைமுகத்திற்குரிய சகல முனையங்களிலும் இயக்கச்செயற்பாடுகள் தொடா்ச்சியாக இடம்பெறுகின்றன.

ஆகையால் இவ்வாறான முக்கியமான தருணத்தில்  பல்வேறு வதந்திகளை அடிப்படையாக கொண்டு உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிடுவதையோ அல்லது பிரசாரம் செய்வதையோ தவிர்ந்து கொள்ளுமாறு இலங்கை துறைமுக அதிகாரசபை உரிய தரப்பினரிடம் கேட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை தொடா்பான செய்திகளை வெளியிடுகையில் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக அதன் தொடா்பாடல் மற்றும் பொதுசன உறவுகள் பகுதியின் அதிகரிகளின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடா்புகொள்ளுமாறு இலங்கை துறைமுக அதிகாரசபை தொிவித்துள்ளது.

திரு. நளின் அபொன்சு – பிரதான முகாமையாளா் – (0718 688 348)

திரு. நிலந்த சிரிகுமார – சிரேஸ்ட முகாமையாளா் – (0768 606 457)

திரு. ஹா்ஸ பீரிஸ் – முகாமையாளா் – (0718 688 311)

திரு. காவ்ய இந்திரஜித் – உதவி முகாமையாளா் – (0718 741 662)

Leave a Reply

*

seventeen + two =