ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பங்களிப்பில் 18.6 மில்லியன் ரூபாகையளிப்பு

இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பங்களிப்பில் ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு நிதியினை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

துறைமுக ஊழியர்களினால் வழங்கப்பட்ட நிதி மூலமாக 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையினை ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கென  இலங்கை துறைமுக அதிகாரசபையின் உபதலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் திரு. W.S.வீரமன் அவர்களினால் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, அமைச்சின் செயலாளர் திரு. M.M.P.K. மாயாதுன்னே, இலங்கை துறைமுக அதிகாரசபையின்மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் திரு. உபாலி டி சொய்ஸா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

*

1 × 5 =