இலங்கை துறைமுக அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள covid-19 நோய் தவிர்ப்பதற்கான வழிகாட்டியின் இரண்டாவது பதிப்பு கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்டது. 28 பக்கங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வழிகாட்டியின் ஊடாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரிய சேவை தளங்களில் covid-19 தொற்று பரவலை தவிர்ப்பதற்கு தேவையான முன்னேற்பாடு மற்றும் அதற்காக பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் 1வது பதிப்பு கடந்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது.
புதிய பதிப்பின் பிரதியில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க, உப தலைவர் கலாநிதி பிரசன்த ஜயமான்ன மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ டி ஏ எஸ் பிரேமச்சந்திர அவர்கள் உட்பட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.அவ்வாறே இந்த புதிய வழிகாட்டியின் பிரதி இலங்கை துறைமுக அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள covid-19 தடுப்பு செயற்பாட்டுக் குழுவுக்குறிய உறுப்பினர்களிடையே பகிர்ந்து அளிக்கப்பட்டது.கொழும்பு துறைமுகத்தின் இயக்கம் மற்றும் சேவை வழங்கும் பொருட்டு கலந்து கொள்ளும் சகலருக்கும் covid-19 தவிர்ப்பு செயற்பாட்டுக்குழு கொழும்புத் துறைமுகம் உட்பட இலங்கையின் ஏனைய துறைமுகங்களினுல்லும் covid-19 நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் செயற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள covid-19 தொற்றுநோய் தவிர்ப்பதற்கான வழிகாட்டியின் இரண்டாவது பதிப்பின் பிரதி இலங்கை துறைமுக அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slpa.lk மற்றும் news.slpa.lk ஆகியவற்றுக்கு நுழைவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
