கொவிட் 19 விழிப்புணர்வு கூட்டம்

துறைமுகத்தில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் அதேவேளை கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதிலும் இலங்கை துறைமுக அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பாக மேற்பார்வை செய்வதற்கென ஒவ்வொரு பகுதியினாலும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான கூட்டம் கடந்த 10 ஆம் திகதி செயலக பகுதியில் உள்ள சபைக்கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேலதிக முகமைத்துவ பணிப்பாளர் திரு. உபாலி டி சொய்ஸா அவர்களின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

கொவிட் 19 நிலவரம் தொடர்பாகவும்  துறைமுகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயாரத்னாயக்க மற்றும் உபதலைவர்- முகாமைத்துவ பணிப்பாளர் திரு. டப்ள்யு. எஸ். வீரமன் உட்பட உயர்முகாமைத்துவம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். மேலும் கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் அனைவரும் கடைப்பிடிக்க  வேண்டியதன்  அவசியத்தினையும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் வைத்திய பகுதியின் பிரதி பிரதான மருத்துவ அதிகாரி திருமதி Dr.யு.எஸ். ஜயசேகர மற்றும் கொவிட் 19 நடவடிக்கை அலுவலக பொறுப்பதிகாரி ஏ.சி.எம்.கே. ரஹ்மான் ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டி நூலின் பிரதிகளும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

இக்கூட்டத்திற்கு காலி மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.துறைமுக ஊழியர்கள் அதிகளவிலானோர் கடமைக்கு திரும்பியுள்ள நிலையில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை அலுவலகம் இவ்விழிப்புணர்வூட்டும் கூட்டத்தினை ஏற்பாடுசெய்தது.

Leave a Reply

*

9 − 4 =