கொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழும்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின

கோவிட் 19தொற்றுநோயை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளில்ஒன்றாக பி.சி.ஆர் மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைக்கு எழுந்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக குழுக்களை பயன்படுத்திக்கொள்வது என்று தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள்வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள்மற்றும் கொழும்பு துறைமுகத்தினை பயன்படுத்துவோர் 251 பேர் எழுந்தமானமாகதெரிவு செய்யப்பட்டுபி.சி.ஆர் மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைக்கு நேற்றைய தினம் (02 ஜுன் 2020)உட்படுத்தப்பட்டனர். இப்பரிசோதனைகளில்கோவிட் 19தொற்றுக்குள்ளான  எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு(ISPS) பிரிவைச்சேர்ந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தில் ஏனைய சேவையில் உள்ள இலங்கை கடற்படையினர் 150 பேர் பி.சி.ஆர் மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டனர். எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கவில்லை என்று இப்பரிசோதனைகள்  மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

*

ten − nine =