இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூல் வெளியீடு!

“இத்தொற்றின் காரணமாக நமக்கு சவால்களும் சந்தா்ப்பங்களும் உள்ளன. அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு உயரிய அா்ப்பணிப்புடன் நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவேண்டியுள்ளது”

ஜெனரல் தயா ரத்னாயக்க, தலைவர் இலங்கை துறைமுக அதிகாரசபை.

துறைமுக இயக்க நடவடிக்கைகளில் வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பினை பேணுவதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூல் கடந்த மே 14 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது. மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலை கேட்போர் கூடத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில் இலங்கையில் இத்தொற்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக இத்தொற்று பரவத்தொடங்கிய நாள் முதல் அதன் ஆபத்தான சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக மேன்மைதங்கிய ஜனாதிபதி அறிந்திருந்தார். “நிலைமை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தொற்றானது நீண்டகால சவால்களையும் எமக்கு கொடுத்துள்ளது. அந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு கூட்டு ஒத்துழைப்பு முக்கியமானதாகும். ஒரு குழுவினராலோ அல்லது ஒரு தனிநபராலோ செய்யக்கூடிய ஒரு விடயம் அல்ல இது. இந்த தொற்றின் காரணமாக தற்போது நிலவுகின்ற சவால்களை வெற்றி கொள்வதற்கு நம் எல்லோருக்கும் சமமான பொறுப்பு உண்டு” என தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். துறைமுகமானது தேசத்தின் இதயமாகும் என்பதுடன் நாட்டின் முக்கிய மையமுமாகும். இத்தொற்றின் காரணமாக நமக்கு சவால்களும் சந்தா்ப்பங்களும் உள்ளன. அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு உயரிய அர்ப்பணிப்புடன் நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவேண்டி உள்ளது” என்றும் கூறினார். மேலும் அனைவரினதும் ஒத்துழைப்பு இச்சந்தர்ப்பத்தில் முக்கியமான தேவைப்பாடாகும் எனறும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் வழிகாட்டி நூல் தொடர்பாக நிகழ்வில் கருத்து வெளியிட்ட இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் திரு. உபாலி டி சொய்ஸா அவர்கள், இந்த வழிகாட்டி நூலில் உள்ள விடங்களை பின்பற்றுவதன் மூலமாக இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமான இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அனைவரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அமையும் என்று தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூலின் முதற்பிரதி இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. உயர் முகாமைத்துவத்தின் ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் திரு. உபாலி டி சொய்ஸா அவர்கள் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினரால் இவ்வழிகாட்டி நூல் உருவாக்கப்பட்டது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கப்டன் அத்துல ஹேவாவிதாரண மற்றும் சிரேஸ்ட உயர் அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் வழிகாட்டி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றுகையில்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூலின் முதற்பிரதி இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட போது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூலினை தயாரித்த துறைமுக அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் குழுவினர் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுடன்.

Leave a Reply

*

13 + 11 =