முனையங்களில் தரித்திருக்கின்ற வாகனங்களை கூடிய விரைவில் துறைமுக வளாகத்தில் இருந்து அகற்றுமாறு உரிய இறக்குமதியாளா்களுக்கு இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமையில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற வாகனங்களை எடுத்துச்செல்வது பிரச்சினையல்ல என்று இலங்கை துறைமுக அதிகாரபை தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப உள்நாட்டு வாகன இறக்குமதியாளா்களினால் இறக்குமதி செய்யப்பட்ட சகல வாகனங்களையும் தாமதமின்றி துறைமுக வளாகத்தில் இருந்து எடுத்துச்செல்வதற்குரிய தேவையான வசதிகள் அவ்விறக்குமதியாளா்களுக்கு துறைமுக வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நிலைமையினை கவனத்தில் எடுக்கும்போது தற்போது கிழக்கு கொள்கலன் முனையத்தில் (ECT) மாத்திரம் கொள்கலன்களில் இருந்து விடுவிக்கப்பட்ட (Destuff) சுமார் 400 வாகனங்களும் மேலதிகமாக கவனத்தில் கொள்ளக்கூடியவாறு UCT முனையத்திலும் இதுவரைக்கும் தரித்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையானது கொழும்பு துறைமுகத்தில் கப்பற்சரக்கு இயக்கச்செயற்பாடுகளின் போது முனைய முகாமைத்துவத்தில் பாரிய பிரச்சினையாக உள்ளது.
ஆகையால் இம்முனையங்களில் தரித்துவைக்கப்பட்டுள்ள வாகனங்களை கூடிய விரைவில் துறைமுக வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு உரிய இறக்குமதியாளா்களுக்கு இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.