கோவிட்-19 காலப்பகுதியில் பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) விநியோக தாமதத்தினை நீக்க புதிய செயற்பாட்டு முறை

புதிய செயற்பாட்டின் மூலம் இதுஅச எவ்வித தாமதமும் இன்றி கோரப்பட்ட தினத்தில் விநியோகத்தினை வழங்கும் உத்தரவாதத்தினை வழங்குவதுடன் சகல உரிய தரப்பினரையும் புதிய செயன்முறைக்கிணங்க செயற்படுமாறும் வலியுறுத்துகிறது.

இலங்கை துறைமுக அதிகாரசபை கோவிட்-19 காலப்பகுதியில் பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) விநியோக தாமதத்தினை நீக்குவதற்கான  புதிய செயற்பாட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய ஏற்பாடுகள் இதுஅச சேவை வழங்கல் பகுதியினால் 05 மே 2020 ஆம் திகதி செயற்படுத்தப்படும்.

இதற்கிணங்க சகல பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) கோரிக்கைகள் புதிய வழிமுறை மாதிரிக்கு ஏற்ப 0718 688 361 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடா்பு கொள்ளக்கூடிய இதுஅச கடமை நேர அதிகாரிக்கு சமா்ப்பிக்கப்பவதுடன் எதிர்பார்க்கப்பட்ட விநியோக திகதி அல்லது ஏற்றல் நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக சமா்ப்பிக்கப்படல் வேண்டும்.

புதிய செயற்பாட்டின் மூலமாக இதுஅச எவ்வித தாமதமும் இன்றி கோரப்பட்ட தினத்தில்  விநியோகத்தினை வழங்கும் உத்தரவாதத்தினை வழங்குவதுடன் சகல உரிய தரப்பினரையும் புதிய செயன்முறைக்கிணங்க செயற்படுமாறும்

 வலியுறுத்துகிறது. பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) கப்பற்சரக்கு ஆகியவற்றுக்கான விநியோக புதிய செயல்முறை மாதிரி விண்ணப்பத்தினை இதுஅச இணையத்தளமான www.slpa.lk அல்லது கீழ்காணப்படும் தொடா்பிணைப்பில் தரவிறக்கம் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடா்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் பிரதான முகாமையாளா் (சேவை வழங்கல்) – 0715 362 339 அல்லது சிரேஸ்ட முகாமையாளா் (சேவை வழங்கல்) – 0770 625 835 ஆகியோருடன் தொடா்புகொள்ள முடியும்.

பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) கப்பற்சரக்கு ஆகியவற்றுக்கான விநியோக புதிய செயல்முறை மாதிரி விண்ணப்பத்தினை கீழ்காணப்படும் இணைய தொடா்புகள் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Format of Loading Request for MCC Operators V3 – Download in PDF or in Ms Excel

Format for Request of Local Delivery V3 – Download in PDF or in Ms Excel

Leave a Reply

*

2 + 8 =