பசுமை துறைமுகத்தை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டு கடல்சார் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மத்திய நிலையத்தின் (ஆசியா) (MTCC) ஏற்பாட்டில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கலந்து கொள்ளலுடன் இணையவழி கருத்தரங்கு(Webinar) அண்மையில் இடம்பெற்றது.
கடல்சார் நிபுணர்கள் மற்றும் வளவாளர்களின் பங்களிப்புடன் மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு இணைய தொழில்நுட்பம் ஊடாக முதன்முறையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஜின் யோ ஷிஅ, பேராசிரியர் ஷீ ஷின், பேராசிரியர் ரு ஆன் வேய், ஷங்ஹய் நகர போக்குவரத்து ஆணைக்குழுவான வேய்பென்ங், பேராசிரியர் ச்சென் யூ லீ, பேராசிரியர் மின் ஹன் ஹயட், கொஸ்கோ கப்பல் நிறுவனத்தின் கப்டன் கின் ஜின் பியன், பேராசிரியர் ச்சு பென்ங் உள்ளிட்ட கடல்சார் நிபுணர்கள் ஏராளமானோர் இக்கருத்தரங்கில் வளவாளர்களாக இணைந்து கொண்டனர்.
சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) சட்ட விதிமுறைகளில் ஒன்றான GHG வாயு வெளியேற்றம் தொடர்பாகஅதன் அண்மைக்கால நடவடிக்கைகள் இக்கருத்தரங்கின் கருப்பொருளானதுகுறிப்பிடத்தக்கது.


