இலங்கை துறைமுக அதிகாரசபையின் மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலையினால் கொரோனா தொற்று நிலைமையினை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த பயிலுநர் பயிற்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பம் செய்யும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக பயிலுநர் அறிவூட்டல் செயலமர்வு அதன் கேட்போர்கூடத்தில் இன்று (06.07.2020) இடம்பெற்றது.
இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்தினை தவிர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக இங்கு பயிலுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


