அமைச்சர் மற்றும் துறைமுக முகாமைத்துவ அதிகாரிகள் சந்திப்பு

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இலங்கை துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவ உயர் அதிகாரிகளை அண்மையில் மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே உட்பட உயரதிகாரிகள் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க, உபதலைவர் – முகாமைத்துவ பணிப்பாளர் திரு. டப்ள்யு. எஸ. வீரமன்,  மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் திரு. உபாலி டி சொய்ஸா, பணிப்பாளர்கள் மற்றும் பகுதித்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுகங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

  Share:

Leave a Reply

*

twenty − thirteen =