உலகின் மிகப்பாரிய கொள்கலன் கப்பல் சுயேஸ் கால்வாய் ஊடாக பயணம்

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எச்எம்எம் அல்ஜெசிராஸ் (HMM Algeciras) கடந்த திங்கட்கிழமை சுயேஸ் கால்வாய் ஊடாக தனது கன்னிப்பயணத்தை மேற்கொண்டது. 24000TEU’s வகைக்குரிய இக்கப்பலானது வரலாற்றுச்சாதனையை பதிவு செய்துகொண்டு ஆசியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சுயேஸ் கால்வாய் ஊடாக பயணித்துள்ளது.

தென்கொரியாவின் ஜோஜேவில் உள்ள தஅவூ சிப் பில்டிங் அன்ட் மெரைன் இன்ஜினியரிங்ஸ் (DMSE) ஒக்போ சிப்யார்ட்டில் நிர்மாணிக்கப்பட்ட 399.9 மீற்றர் நீளமுடைய எச்எம்எம் அல்ஜெசிராஸ் (HMM Algeciras) கப்பலானது 23,964 TEU’s  கொள்ளளவுடையதும் ஒரே வகைக்குரிய 12 கப்பல்களில் முதலாவது கப்பலாகவும் இது காணப்படுகின்றது. டீஎஸ்எம்இ அன்ட் சம்சுங் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் (SHI) நிறுவனத்தினால் இக்கப்பலானது வடிவமைக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் விநியோகிக்கப்பட்ட இப்பாரிய கொள்கலன் கப்பலானது தூர கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான சேவையில் (FE4) ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆசியா மற்றும் வடஐரோப்பா வார்த்தக பாதையில் உள்ள துறைமுகங்களான கிங்டாஒ, பூஸான், நிங்போ ,சங்ஹாய், யங்சியான், சுயேஸ் கால்வாய், ரொட்டா்டாம், ஹம்பா்க், அன்ற்வெப், லண்டன் கேற்வே, பின்னா் சுயேஸ் கால்வாய் ஊடாக சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களுக்கிடையில் இக்கப்பலானது சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சுயேஸ் கால்வாய் அதிகாரசபை (SCA) யின் தலைவர் அட்மிரல் ஒஸாமா ரபி சுயேஸ் கால்வாய் அதிகாரசபையின் உயர் அனுபவம் வாய்ந்த மாலுமிகள் (Pilots) தேவையான கப்பலோட்ட சேவைகளை வழங்குவதற்கென ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்தார்.

அட்மிரல் ஒஸாமா ரபி உட்பட சுயேஸ் கால்வாய் அதிகாரசபை (SCA) யின் சிரேஸ்ட மாலுமிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாபகார்த்த சின்னங்களுடன் உலகின் மிகப்பெரிய எச்எம்எம் அல்ஜெசிராஸ் (HMM Algeciras) கொள்கலன் கப்பலை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

*

3 × 4 =