துறைமுக வளாகத்தில் கடமையின் நிமித்தம் இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் மோப்பநாய் பிரிவின் செயற்பாடு

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் உயர்தரத்தில் நிறைவேற்றப்படுவதை நோக்காகக்கொண்டு அதன் நடவடிக்கைகளுக்கு என  இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்பநாய் பிரிவு 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி நான்கு மோப்ப நாய்களுடன் உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவுடன் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி மேலும் 04 மோப்பநாய்கள் இணைந்து கொண்டன. அதற்கிணங்க பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்பநாய் பிரிவானது 08 மோப்பநாய்களுடன் தனது கடமைகளை இதுவரையில் மேற்கொண்டு வருகின்றது.

வெடிபொருட்களை அடையாளம் காணுதல், சட்டவிரோத போதைப்பொருட்களை அடையாளம் காணுதல் , குற்றவாளிகளை கண்டுபிடித்தல் போன்றன இம்மோப்ப நாய்களின் விசேட செயற்பாடுகளாகும். அப்போதைய துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஸ தலைமையில் முன்னாள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் சாலிய விக்ரமசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்பிரிவு உருவாக்கப்பட்டது.

துறைமுக பொலிஸ்நிலையத்தில் உருவாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்பநாய் பிரிவானது அண்மையில் துறைமுக அதிகாரசபையின் தற்போதைய தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களின் அவதானிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

*

twelve − five =