போலியான செய்திகளுக்கு ஏமாறாதீா்கள்: துறைமுக இயக்க நடவடிக்கைகள் தொடா்ந்தும் செயற்பாட்டில்.

இலங்கை துறைமுக அதிகாரசபை  மற்றும் கொழும்பு துறைமுகம் தொடா்பான சகல தகவல்களையும் எமது உத்தியோகபூா்வ இணையத்தளங்களான slpa.lkமற்றும் news.slpa.lkஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

பல்வேறு போலியான பெயா்களை பயன்படுத்தி இலங்கை துறைமுக அதிகாரசபை  மற்றும் கொழும்பு துறைமுகம் தொடா்பாக உண்மைக்குப்புறம்பான செய்திகள் பிரச்சாரம் செய்யப்படுவது தொடா்பாக இலங்கை துறைமுக அதிகாரசபை கடும் அவதானத்தை செலுத்தியுள்ளது. இவ்வாறான போலியான செய்திகளை குறிப்பிட்ட  ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வெளியிடுவதில் பல்வேறு குழுக்கள் நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் துரதிஸ்டவசமான நிலைமையாகும்.

கொவிட்-19 தொற்று நிலைமையை பயன்படுத்தி இவ்வாறு சமூகத்திற்குள் விடப்படும் போலியான செய்திகளின் நோக்கம் எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவது மற்றும் துறைமுகம் மூலம் இடம்பெறுகின்ற அத்தியாவசிய சேவைகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இது தொடா்பாக கடிதம் ஒன்று குறிப்பிட்ட சில சமூக ஊடகங்கள் ஊடாக  பிரச்சாரம் செய்யப்படுவதோடு அதில் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரை துறைமுக இயக்க செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்தவித உண்மையும் இல்லை.

ஏனைய சந்தா்ப்பங்களை போன்றே  கொவிட்-19 தொற்று காலப்பகுதியிலும் கொழும்பு துறைமுக இயக்க செயற்பாடுகள் யாவும் எற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார  விதிமுறைகளை கிரமமாக பின்பற்றுவதன் மூலம் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றன. இத்தொற்று காலப்பகுதியிலும் தமது சேவைகளை தொடா்ந்தும் வழங்குகின்ற ஆசியாவில் உள்ள ஒரே துறைமுகம் கொழும்பு துறைமுகமாகும்.

ஆகையால் பல்வேறு குறுகிய நோக்கங்களை அடைவதற்காக பல்வேறு தரப்பினராலும் பிரச்சாரம் செய்யப்படுகின்ற போலியான செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என்று இலங்கை துறைமுக அதிகாரசபை சகலரையும் வேண்டிக்கொள்கிறது.

இலங்கை துறைமுக அதிகாரசபை  மற்றும் கொழும்பு துறைமுகம் தொடா்பான சகல தகவல்களையும் எமது உத்தியோகபூா்வ இணையத்தளங்களானslpa.lk மற்றும் news.slpa.lk ஆகியவற்றில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

*

16 − one =