ஆசிய அபிவிருத்தி வங்கி துறைமுக 2050 வரையிலான துறைமுக அபிவிருத்திக்கு ஆதரவு

ஒலுவில் துறைமுகம் கடற்றொழில் அமைச்சிடம் வழங்கப்படும்.

இலங்கை துறைமுக அதிகார சபை,  துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றினைந்து நடாத்தும் news.slpa.lk  செய்தி தள அங்குரார்பனம் மற்றும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு துறைமுகம் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக்க கரங்களால்  இன்று(21) அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கருத்துரைத்த அமைச்சர் குறிப்பிட்டதாவது ‘ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை துறைமுக அதிகார சபையால் 2050ம் ஆண்டு வரையில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி முதற்கட்ட ஆய்வின் பின்னர் கொழும்பு துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது’.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க உள்ளடங்கலாக துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள்.

துறைமுகங்கள் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் குறிப்பிட்டதாவது,’ கொள்கலன்கள் செயற்பாட்டினை அதிகரித்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் திட்டத்தின் கீழ் கொழும்பு தென் துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கிழக்கு முனையத்தில் தற்போது ஒரு கப்பல் மாத்திரம் பிரவேசிக்கும் நிலை இருப்பதாகவும் இம்முனையத்தை விரிவுபடுத்துவதன் மூலம் முனையத்தினுள் மூன்று கப்பல்கள் வருகைத்தரும் வகையில் அபிவிருத்திச் செய்யப்படும். இந்நிகழ்வில் மேலும் கருத்துரைத்த அமைச்சர் ‘ கொழும்பு மேற்கு முனையத்தை அபிவிருத்திச் செய்வதன் மூலமாகLNG (Liquid Natural Gas)  முனையமொன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்யப்படுகின்றது.  ஒலுவில் துறைமுகத்தை வர்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்ய இயலாதுள்ளமையால் அதனை மீன்பிடி துறைமுகமாக அபிவிருத்திச் செய்யும் பொருட்டு கடற்றொழில் அமைச்சிடம் கையளிக்கப்படும். மேலும் இத்துறைமுகத்தை சுற்றி கைத்தொழில் பேட்டையொன்றை அமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மாணித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை எடுத்துக்கொண்டால் இத்துறைமுகத்தின் கப்பல் தளத்தை அபிவிருத்திச் செய்யும் பொருட்டு இந்தியா அமெரிக்க டொலர்கள் 44 மில்லியன்களை கடனாக வழங்கியுள்ளது. அதில் ஒரு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் மற்றையதை இலங்கை கடற்படைக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் இரவு நேர நடவடிக்கைகளின் பொருட்டு ஜப்பான் அரசாங்கம் 01 மில்லியன்

ஆசிய அபிவிருத்தி வங்கி துறைமுக 2050…..

யென் (ரூபாய் 1.5 பில்லியன்கள் வரையில்)  முதலீடுச் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.  தற்பொழுது இத்துறைமுகத்தில் பகல் வேளையில் மாத்திரமே துறைமுக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதே போல் காலி துறைமுகத்திலும் இரவு நேர செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

கப்பற்றுறையின் சட்டங்களை இலகுபடுத்துதல் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது தேசிய பாதுகாப்பு, துறைமுக பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஊடகங்களிற்கு கருத்துரைத்த இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க குறிப்பிட்டதாவது ‘ கொழும்பு துறைமுகத்தின் கடந்த ஆண்டு மீள் ஏற்றுமதி வளர்ச்சி 19.3%வீதமாகும். இதில் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான முனையத்தின் வளர்ச்சி வீதம் 20.3%வீதமாகும். கடந்த ஆண்டில் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகங்களுள் முதல் இடத்தை கொழும்பு துறைமுகம் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாமிடத்தை சிங்கப்பூர் துறைமுகம் பெற்றுக் கொண்டது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தொடர்பாடல் மற்றும் பொதுசன உறவுகள் பகுதியால் இவ் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்தியின் முக்கியத்துவத்தை அறிதல், சரியான,விசுவாசமான முறையினூடாக துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் துறையின் விசேட நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகள் ஆகியனவற்றை மக்கள் அறிந்துக்கொள்ளும் முகமாக இவ் news.slpa.lk இணையத்தளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகள், புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள், தேசிய கப்பற்றுறை மற்றும் சமுத்திரவியல் தரப்படுத்தலில் கொழும்பு துறைமுகத்தை உள்வாங்கிக் கொண்டு , கொழும்பு துறைமுகம் ஈட்டிய  சர்வதேச வெற்றிகள் தொடர்பான செய்திகளை நாட்டு மக்கள் அறியும் பொருட்டு,  வெளிநாடுகளில் வாழ்கின்ற சமுத்திரவியல் துறைசார் நிபுணர்களுக்கு அவசியமான தகவல்களை பெற்றுக்கொடுப்பதே இவ்விணையதளத்தின் முக்கிய நோக்கமாகும்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறையினைப் போன்று சமுத்திரவியல் துறை தொடர்பிலும் துறைமுகஞ்சார்ந்த அபிவிருத்தி செய்திகள் தகவல் பரிமாற்றம் அறிவியல் முகாமைத்துவம் செய்வதில் இவ் news.slpa.lk இணையதளம் முக்கிய பங்குவகிக்கும்.

Leave a Reply

*

4 × five =