யூரோ ஸ்ப்ரிட் கொழும்பு துறைமுகம் வருகை

வாகனக்கப்பலான யூரோ ஸ்ப்ரிட் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தது. வாகனக்கப்பலான யூரோ ஸ்ப்ரிட் 1998ல் நிர்மாணிக்கப்பட்டு லைபீரிய கொடியின் கீழ் பயணிக்கிறது. வெற்றிகரமாக சரக்கு கையாளல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு இக்கப்பலானது சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. கொரோனா தொற்றின்  பின்னர் கொழும்புத்துறைமுகத்துக்கு வருகை தந்த முதலாவது வாகனக்கப்பலாகும்.

இக்கப்பலானது 15,483 தொன் கொள்ளளவை கொண்டு செல்லக்கூடிய 7.6 மீற்றர் ஆழத்தையும் 188 மீற்றர் நீளத்தையும் 31.2மீற்றர் அகலத்தையும் உடையது ஆகும்.

Leave a Reply

*

1 × 1 =